Posts

வீட்டை சுத்தம் செய்யும் டிப்ஸ்.( House Cleaning Tips in Tamil)

Image
வீட்டை தூய்மைப்படுத்துவது என்பது சற்று கடினமான செயல் தான் . நம்முடைய எந்திரமான வாழ்க்கை முறையில் வீட்டை தூய்மை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை . உங்களுடைய இந்த பணியை எளிதாக்க சில பயனுள்ள குறிப்புகளை இங்கு குறிப்பிடுகிறேன் . சிறிய சுத்தப்படுத்துதல் முறையை தினந்தோறும் கையாள வேண்டும் . அதாவது நம் வீட்டின் சமையலறையை தினந்தோறும் இரவு சுத்தம் செய்ய வேண்டும் . அவ்வாறு செய்வதால் கறைகள் படியாமல் தடுத்து நம் சுத்தம் செய்யும் நேரத்தை குறைக்கலாம் . அட்டவணை தயார் செய்யுங்கள் : துணிகளை துவைப்பது , வீட்டின் கதவுகள் ஜன்னல்களை துடைப்பது மற்றும் இதர தூய்மைப்படுத்தும் பணிகளுக்கும் வாரந்தோறும் அட்டவணை தயார் செய்து அதன்படி செய்யலாம் . வீட்டை சுத்தம் செய்வது என்பது பலவற்றை உள்ளடக்கியது . துணி வைக்கும் அலமாரியை சுத்தம் செய்வது , புத்தக அலமாரியை சுத்தம் செய்வது , மரத்தால் செய்யப்பட்ட தினந்தோறும் பயன்படும் நாற்காலி மேஜை போன்றவற்றை சுத்தம் செய்வது , சமையலறையில் உள்ள பொருள்களை