வீட்டை சுத்தம் செய்யும் டிப்ஸ்.( House Cleaning Tips in Tamil)


வீட்டை தூய்மைப்படுத்துவது என்பது சற்று கடினமான செயல் தான். நம்முடைய எந்திரமான வாழ்க்கை முறையில் வீட்டை தூய்மை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்களுடைய இந்த பணியை எளிதாக்க சில பயனுள்ள குறிப்புகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

சிறிய சுத்தப்படுத்துதல் முறையை தினந்தோறும் கையாள வேண்டும்.

அதாவது நம் வீட்டின் சமையலறையை தினந்தோறும் இரவு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் கறைகள் படியாமல் தடுத்து நம் சுத்தம் செய்யும் நேரத்தை குறைக்கலாம்.



அட்டவணை தயார் செய்யுங்கள்:

துணிகளை துவைப்பது , வீட்டின் கதவுகள் ஜன்னல்களை துடைப்பது மற்றும் இதர தூய்மைப்படுத்தும் பணிகளுக்கும் வாரந்தோறும் அட்டவணை தயார் செய்து அதன்படி செய்யலாம்.

வீட்டை சுத்தம் செய்வது என்பது பலவற்றை உள்ளடக்கியது.
துணி வைக்கும் அலமாரியை சுத்தம் செய்வது ,
புத்தக அலமாரியை சுத்தம் செய்வது ,
மரத்தால் செய்யப்பட்ட தினந்தோறும் பயன்படும் நாற்காலி மேஜை போன்றவற்றை சுத்தம் செய்வது ,
சமையலறையில் உள்ள பொருள்களை ஒழுங்காக வரிசைப்படுத்துவது ,
சிமெண்ட் தரையை சுத்தம் செய்வது,
கழிப்பறையை சுத்தம் செய்வது
பூஜை அறையை சுத்தம் செய்வது
படுக்கையறையை சுத்தம் செய்வது.
குளியலறைகள் , படுக்கையறைக்கு மற்றும் பாத்திரம் கழுவும் இடங்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருட்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
தரை முதல் மேற்கூரை வரை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
மின்விசிறி , . சி போன்ற மின்சாதன பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் தனித்தனியே நேரத்தை ஒதுக்கி சுத்தம் செய்வதால் வார இறுதியில் தூய்மைப்படுத்துதல் என்பது மிகவும் எளிதாக மாறிவிடும். இவற்றிற்கு முதலில் அட்டவணை தயார் செய்யுங்கள்.

இவ்வாறு செய்வதால் வீடு பளிச் என்று ஆகும். தினந்தோறும் சுத்தம் செய்தால் இல்லம் கோவிலாகும்! 



Comments